Header Ads

Header ADS

பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் வகுப்புகளை நடத்த அட்டவணை வெளியீடு.








அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் செயல்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. செமஸ்டர் வகுப்புகளை அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். செய்முறை வகுப்புகளை அக்டோபர் 28-ல் தொடங்கவும், பருவத் தேர்வுகளை நவம்பர் 9-ம் தேதிக்குள் முடிக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


டிசம்பர் 14-ம் தேதி நடப்பாண்டின் இரண்டாவது செமஸ்டர் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் மற்றும் இண்டர்னல் மதிப்பெண் முறையில் தேர்ச்சி வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.






No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.