அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 17, 2020

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்.









தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா ஊரடங்கினால் ஜூன் மாதத்தில் துவங்கவேண்டிய பள்ளிகளானது தற்போது மாணவர் சேர்க்கையும் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள அரசு பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழ் வழி கல்வி, ஆங்கில வழி கல்வி என இரண்டு வழி கல்விகளுக்கும் இன்றைய தினம் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே விண்ணப்பங்களை பெற்ற பெற்றோர்கள் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இதில் ஆங்கில வழி கல்வி கற்பதற்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அரசு தரப்பில் அதிகபட்சமாக காலை, பிற்பகல் மற்றும் மாலை என 20 பேர் வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தொடர்ந்து, அதிகளவில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு மாணவர் சேர்க்கைக்காக வரக்கூடிய பெற்றோர்கள் அதிகளவில் இருப்பதால் எந்த தினத்தில் குழந்தைகளுடன் வந்து மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என்பது தொடர்பான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. குறைந்த அளவில் தமிழ் வழி கல்விக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு இன்றைய தினம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.






No comments: