வாட்ஸப்பில் ஒருவர் நம்பரை சேவ் செய்யாமலே மெசஜ் அனுப்புவது எப்படி.....
உலகமெங்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்ஆப் தான். எதற்கெடுத்தாலும் வாட்ஸ்ஆப் என்று வாட்ஸப் இல்லாதவர்களே இல்லை என்று என கூறலாம்.
மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து நீங்கள் யாருக்கேனும் மெசேஜ் அனுப்ப விரும்பினால் முதலில் அந்த நபரின் எண்ணை நீங்கள் சேவ் செய்ய வேண்டும். நம்பரை சேவ் செய்யாமலே ஒருவருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசஜ் அனுப்ப முடியாது என்றே பலரும் நினைக்கின்றார்கள்
ஆனால் ஒருவர் நம்பரை சேவ் செய்யாமலே வாட்ஸ் அப் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி..! என்பதை பார்ப்போம்
முதலில் உங்கள் மொபைலில் ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.
அதில் https://wa.me/ NUMBER நம்பர் என்று இருக்கும் இடத்தில் யாருக்கு மெசஜ் அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது நம்பரை டைப் செய்யவும். உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் 919990012345 என்று டைப் செய்யவும்
அடுத்து இப்போது எண்டர் அழுத்தவும்
அடுத்து உங்கள் ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.
அடுத்ததாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.
அவ்வளவுதான் நீங்கள் உங்கள் மெசஜை தொடரலாம்
No comments
Post a Comment