Header Ads

Header ADS

ஜியோவின் அடுத்த அதிரடி;திட்டங்கள் அறிவிப்பு











ஜியோவின் அடுத்த அதிரடி; 'அன்லிமிட்டெட் பிராட்பேண்ட்' திட்டங்கள் அறிவிப்பு

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ பைபர் பிராட்பேண்ட், நுகர்வோருக்கு அன்லிமிட்டெட் இணையதள சேவையை வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பிராட்பேண்ட் திட்டங்கள், மாதத்திற்கு 399 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. இந்த புதிய திட்டங்களின் கீழ், வரம்பற்ற இணைய சேவையை, சமச்சீரான வேகத்தில் பெற முடியும். மேலும், 12 .டி.டி., (OTT) தளங்களுக்கான சந்தாவையும் பெறலாம்.

அதன்படி, ரூ.399 திட்டத்தில், 30 எம்.பி.பி.எஸ்., (Mbps) வேகத்தில் அன்லிமிட்டெட் இணைய மற்றும் வாய்ஸ்கால் வசதி வழங்கப்படுகிறது. ரூ.699 திட்டத்தில், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் அன்லிமிட்டெட் இணைய மற்றும் வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியையும் பெறலாம். ரூ.999 திட்டத்தில் வரம்பற்ற இணையத்தை 150 எம்.பி.பி.எஸ்., வேகத்துடன் வழங்குகிறது. மேலும் இதில், வரம்பற்ற வாய்ஸ்கால் வசதியும் 11 .டி.டி., தள 






பயன்பாடுகளுக்கான சந்தாவும் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,499 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற வாய்ஸ்கால் சலுகையும், 12 .டி.டி., தள பயன்பாடுகளுக்கான சலுகையும் 300 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணைய சேவையையும் பெற முடியும்.

.டி.டி., தள பயன்பாடுகளை பெற ஜியோ டிவி பிளஸ் (JioTV Plus) வழியாக அணுகலாம். இதில், நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி..பி., ஜியோ சினிமா, ஜீ5, சோனி லிவ், வூ, ஆல்ட்பாலாஜி, சன் என்.எக்ஸ்.டி., லயன்ஸ்கேட் பிளே, ஷெமரூ மற்றும் ஹோய்சோய் ஆகியவை அடங்கும்..டி.டி., சேவையை ஆன்லைனில் அணுக, ஜியோ பைபர் செட்டாப் பாக்சைப் பெறுவதும் இந்த திட்டங்களில் அடங்கும். செப்., 1 முதல் இந்த புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது. இதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30 நாள் இலவச சேவையை ஜியோ வழங்குகிறது. அதில், 150 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் இணைய சேவையையும், 4கே செட்டாப் பாக்சும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் வசதியும் கிடைக்கும்.

'இதைப் பெற, புதிய வாடிக்கையாளர்கள் திருப்பிப் பெறக்கூடிய தொகையை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் செட்-டாப் பாக்ஸ் மற்றும் ஜியோ பைபர் மோடம் ஆகியவற்றைப் பெறலாம்' என, ஜியோ பைபர் தெரிவித்துள்ளது.







No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.