இ -பாஸ் தேவையில்லை , எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது - மத்திய அரசு!
மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ்
கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படுவதால் இனி அந்த நடைமுறை எதற்கு என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் தற்போது மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
No comments
Post a Comment