ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது
தற்போது நாம் அனைவருமே டூயல் சிம் உள்ள போன்களையே பயன்படுத்தி வருகின்றோம். இதனுடன் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருமே வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள் ஆனால் நம்மில் பலருக்கும் ஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிவது இல்லை
மேலும் பலர் இரண்டு வாட்ஸப் உபயோகபடுத்த டூயல் சாப்ட்வேர் ஏதேனும் உபயோகபடுத்துவார்கள். அதுபோல் உபயோகபடுத்தினால் உங்கள் மொபைல் போன் வேகம் இருக்காது.
ஆனால் இந்த செயல்முறையை செய்ய நீங்கள் எந்தவித சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யவேண்டாம். அதாவது இரண்டு வாட்ஸ்அப் நீங்கள் எளிதாக ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்யலாம்
அதற்க்கு முதலில் நீங்கள் பிளேஸ்டோருக்கு செல்லுங்கள் அங்கு வாட்ஸப் மெசஜர் WhatsApp Messenger என்று இருக்கும் இதனைதான் பலரும் உபயோகபடுத்தி கொண்டு இருப்பார்கள்.
உங்கள் மொபைல் போனில் ஏற்கனவே இன்ஸ்டால் ஆகியிருந்தால் மீண்டும் பிளேஸ்டோரில் வாட்ஸப் பிஸினஸ் WhatsApp Business என்று சர்ச் செய்யுங்கள்.
அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் வேறு ஏதேனும் மொபைல் எண்னை கொடுத்து வழக்கம் போல் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் உங்கள் மொபைல் போனில் இரண்டு வாட்ஸப் ரெடி
No comments
Post a Comment