Header Ads

Header ADS

வாட்ஸ்அப் செயலியில் மிகவும் எதிர்பார்த்த வசதி அறிமுகம்: பயனர்கள் மகிழ்ச்சி.!











உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர், மேலும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகள் வந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நண்பர்கள், உறவுகள்,அலுவலக தொடர்புகள், தொழில்வாய்ப்புகள் என அனைத்திற்கும் எல்லோருமே வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டிய உள்ளது

மேலும் இந்தி செயலியில் குழுவாகவும்,தனி நபராகவும் சாட் செய்யும் வசதி உள்ளது. இருந்தபோதிலும் சில சமயங்களில் வேண்டாத ஃபார்வேட் மெசேஜ்களை தனியாகவும், குழுவிலும் பகிரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உண்மைத்தன்மை அறியாமல் அனுப்பப்படும் சில ஃபார்வேட் மெசேஜ்களால் பல சிக்கல்கள் உண்டாகின்றன.

இதுபோன்ற போலி ஃபார்வேட் மெசேஜ்களை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் பல முயற்சிகளை கையாண்டது, ஃபார்வேர்ட் மெசேஜ்களை 5நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அறிவித்தது. ஒன்பிளஸ் நோர்ட் ஆகஸ்ட் 6 விற்பனை: தனித்துவமான சிறப்பம்சங்கள்., ஆரம்பமே சலுகையோடு! இந்நிலையில் போலி செய்திகள் ஃபார்வேர்ட் மெசேஜ்களாக பரவுவதை தடுக்கும் விதமாகவும் அதன் உண்மைத் தன்மையை அறியும் விதமாகவும் புது அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. search the web என்ற அப்டேட்டின்படி ஃபார்வேர்ட் மெசேஜ்களுக்கு அருகிலேயே செர்வ் ஆப்ஷன் இருக்கும். இந்த புதிய அப்டேட் நேரடியாக கூகுளுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஷன் மூலம் சம்பந்தப்பட்ட ஃபார்வேர்ட் மெசேஜின் உண்மைத் தன்மை என்பதை கூகுளில் இருந்து உடனடியாக பெறலாம். தற்சமயம் இந்த புதிய அப்டேட் பிரேசில், மெக்சிகோ,அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டுமே; வந்துள்ளது






விரையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்கள் இணைக்கப்படும். சமீபத்தில் QR கோடு மூலம் புதியவர்களை உள்ளே இணைக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. பின்பு அனைவரும் எதிர்பார்க்கப்படும் பணப்பறிமாற்றம் செய்யும் வசதியும் விரைவில் கொண்டுவரப்பட இருக்கிறது. இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரேனோ 4ப்ரோ.! விலை மற்றும் விபரங்கள்.! இந்நிலையில் தேவையற்ற அல்லது முக்கியத்துவம் இல்லாத சாட்களை நிரந்தரமாக மியூட் செய்து வைக்கும் அம்சம் புதிதாக இணைக்கப்பட உள்ளது. இந்த வசதி மூலம் 8 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஓராண்டுக்கு ஒரு சாட்- மியூட் செய்து வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

 குறிப்பாக இந்த வசதியைக் கொண்டு நீங்கள் மியூட் செய்வதால் அந்த சாட்டில் புதிய மெசேஜ் வரும் போது, கண்டிப்பாக நோடிபிகேஷன் காட்டாது. மேலும் சாட்டிங்கிற்கும் இந்த மியூட் வசதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ஓராண்டு என்பதற்கு பதிலாக நிரந்தரமாக என்று புதிய அம்சம் சேர்க்கப்பட உள்ளது, இந்த அம்சம் தற்சமயம் பீட்டா வெர்சன் பீட்டா வெர்சன் பரிசோதனையில் உள்ளது. மேலும் இதற்கான அப்டேட், விரைவில் ஆண்ட்ராய்டு மறறும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.






No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.