புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு அம்சமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை போன்று காலை உணவு வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு
பள்ளிகளில் காலை உணவின்றி வரும் மாணவர்களால் கல்வியில் நாட்டம் செலுத்த இயலாது என்பதற்காக பள்ளிகளிலேயே காலை உணவு
வழங்கும் திட்டத்தை புதிய கல்விக்கொள்கை முன்மொழிந்துள்ளது.
காலை
உணவின் மூலம் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும் என்பதாலும், அதன் மூலம் பாடங்களில் மாணவர்கள் கவனம் செலுத்த ஏதுவாக அமையும் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஒரு
சில இடங்களில் சூடான காலை உணவு வழங்க இயலாத சூழல் ஏற்படும் என்பதால், அப்பகுதிகளில் நிலக்கடலை, வெல்லம் அல்லது பழங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய
உணவு திட்டத்தின்கீழ் 59 கோடி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 26 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் மத்திய மனிதவளத்துறை தெரிவித்துள்ளது
No comments
Post a Comment