94% குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லை - ஆய்வில் தகவல்
4 மாநிலங்களில் 94% குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் அல்லது இணைய வசதி இல்லை - ஆய்வில் தகவல்
மே - ஜூன் மாதங்களில் குழந்தைகள் உரிமை அமைப்பு இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில், சுமார் 94 சதவீதம் பேருக்கு ஸ்மார்போன்கள் அல்லது ஆன்லைன் கல்விக்கான இணையதள வசதி இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
11-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இணைய அணுகல் குறித்த உண்மை நிலையை கண்டறியும் வகையில் இந்த ஆய்வு போனில் நடத்தப்பட்டது.
கொரோனா தொற்றுநோயால், பள்ளிகள் மூடப்பட்டு கல்வி தடைபட்டிருக்கும் நிலையில் , சி.ஆர்.ஒய் ஆன்லைன் கல்விக்கான சாத்தியக்கூறுகளை தெரிந்துகொள்ள விரும்பியதாக கூறியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர்களில் 1,445 பேரில் ஒன்பது சதவிகிதத்தினர் பதிலளித்ததாகவும், தமிழ்நாட்டில் கணக்கெடுக்கப்பட்ட 1,740 பேரில் வெறும் மூன்று சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்போன்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 95 சதவீத குடும்பங்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன் என்பது ஆடம்பர செலவாகவே கருதப்படுகிறது. நான்கு மாநிலங்களில் சுமார் 94 சதவீதம் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்விக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையவசதி இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வெறும் 6 சதவீத குழந்தைகள் தங்களுக்கென்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். 29 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தினரின் போனைப் பயன்படுத்துகிறார்கள். இதில் 55 சதவீதம் பேருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அவர்களில் 77 சதவீதம் பேருக்கு இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு சூழலை உறுதிப்படுத்த கல்வி அவசியம். வழக்கமான கல்வி கடினமாகி வருவதோடு, ஆன்லைன் கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகி வருவதால், புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் முன்பைவிட பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறியுள்ளார்.
No comments
Post a Comment