180 மில்லியன் பான் அட்டைகள் செயலிழக்க வாய்ப்பு! காரணம் இது தான் என்கிறது வருமான வரித்துறை! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, August 22, 2020

180 மில்லியன் பான் அட்டைகள் செயலிழக்க வாய்ப்பு! காரணம் இது தான் என்கிறது வருமான வரித்துறை!




வருமானம் வரி துறையினரின் சமீபத்திய அறிவிப்புப் படி வரும் 2021 மார்ச் 31ம் தேதிக்குள் ஆதரவுடன் இணைக்கப்படாதா 180 மில்லியன் பான் அட்டைகள் செயலிழந்து போக வாய்ப்புள்ளது என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையுடன் பான் அட்டையை இணைக்காதவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 







தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் சிக்குவார்கள் சமீபத்திய அறிவிப்பின் படி குறிப்பாக ஒன்றிற்கும் அதிகமான பான் அட்டை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்பவர்களும் இந்த நடவடிக்கையின் மூலம் சிக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரியைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டும் நபர்களும் இதன் மூலம் எளிதாகச் சிக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இப்படியா? 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 15 மில்லியன் மக்கள் மட்டுமே வருமான வரித்துறைக்கு தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளது விசித்திரமாக உள்ளது, நாட்டில் சரியாக 50.95 கோடி பான் அட்டை பயனர்கள் உள்ளனர். இவர்களில் 6.48 கோடி நபர்கள் மட்டுமே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர். தற்பொழுது வரை இணைக்கப்பட்டுள்ள அட்டைகள் இதில் 15 மில்லியன் பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் என்றும், அதில் 4.98 கோடி மக்கள் ஜீரோ டேக்ஸ் லயாபிலிட்டி அல்லது செலுத்தப்பட்ட முழு வரியை கேட்டு .டி.ஆர் விண்ணப்பித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தற்பொழுது வரை சுமார் 327.1 மில்லியன் பான் அட்டை பயனர்கள் மட்டுமே தங்களின் அட்டைகளை ஆதார் அட்டையுடன் இணைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் மதிப்பு பரிவர்த்தனை பட்டியல் அதேபோல், வருமான வரி துறை கண்காணிக்கும் உயர் மதிப்பு பரிவர்த்தனை பட்டியலை அரசாங்கம் விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பட்டியல் விரிவு செய்யப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கல்வி கட்டணம், மின்சார கட்டணம், வருமான வரித்துறை எச்சரிப்பு விமான போக்குவரத்துக்குக் கட்டணம், நகை வாங்கும் கட்டணம், 25 ஆயிரத்திற்கு மேல் சொத்து வரி, 50 ஆயிரத்திற்கு மேல் ஆயுள் காப்பீடு செலுத்துபவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட வாய்ப்புள்ளது. மார்ச் 31ம் தேதி 2021 காலத்திற்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாதா பயனர்களின் அட்டைகள் செயல் இழக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

No comments: