Header Ads

Header ADS

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்


       





                           
கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை குறைக்க தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை கடந்த 2015 ஆண்டு அறிமுகப்படுத்தியது. 

இந்திய ரிசர்வ் வங்கி மூலம் பொதுத் துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மூலம்  இந்த தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 24 கேரட் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்களில் ஒருவர் குறைந்த பட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக ஓராண்டில் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டித் தொகை வழங்கப்படும், எட்டு ஆண்டுகள் இதன் முதிர்வு காலம் ஆகும். 

இதில் தமிழகத்தில் கடந்த 2015 ஆண்டு முதல் இதுவரை  87.71 கோடி ரூபாய்க்கு தங்க பத்திரம் விற்பனையாகியுள்ளது. ஆனால்  ஊரடங்கு காலத்தில் மட்டும் 31 கிலோ  என 15 கோடி ரூபாய்க்கு தங்க பத்திரம் விற்பனையாகியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இனி வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சல் துறை அதிகாரிகள்  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.