Header Ads

Header ADS

TET – ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க தேர்வர்கள் கோரிக்கை! -CM -CELL


2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வணக்கம் . நாங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகளாக பணிநியமனம்பெறாமல் அல்லல்பட்டு எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற தொடர் முறைகேடுகளே , எங்கள் பணிவாய்ப்பு பரிபோக மூலக்காரணம். எங்களது நிலையை பலமுறை உங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் . ஆசிரியர்தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றநிலை எங்களது வெந்த புண்ணிலே வேல்பாய்ச்சியது போல் உள்ளது. கடந்த ஆறாண்டுகளாக தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் கூட நிரப்பபடவில்லை. மேலும் கடந்த ஆறாண்டுகளில் இருநூறுக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே பேராசிரியருக்கான தகுதிதேர்வு SLET , NET சான்றிதழ் காலம் ஆயுட்காலமாக உள்ளது என்பதை நினைவு கூர்கிறோம். எங்களது கோரிக்கைகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழை ஆயுட்காலமாக்க வேண்டும். 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனம் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.