#Exclusive | 10-ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு: சிறப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கும் கிடைக்குமா? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 26, 2020

#Exclusive | 10-ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு: சிறப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கும் கிடைக்குமா?





#Exclusive | 10-ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு: சிறப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கும் கிடைக்குமா?

பத்தாம் வகுப்பு ஆல் பாஸ் தங்களுக்கும் கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் சிறப்புப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் உள்ளன. இங்கு, கண் பார்வையற்ற, காது கேளாத, வாய் பேச முடியாத, மூளை வளர்ச்சி குன்றியோர் உள்ளிட்ட  மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 3000-க்கும் மேற்பட்டோர் தனித்தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வழக்கம் போல் விண்ணப்பித்து, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பெற்றனர்.

அருகில் உள்ள பள்ளிகளில்  அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வையும் எழுதியுள்ளனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தும் 'ஆல் பாஸ்' என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், தனித் தேர்வர்களின் தேர்ச்சி நிலை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால்  இன்னும்  அறிவிக்கவில்லை. இது  சிறப்புக் குழந்தைகள் & அவர்களின்  பெற்றோர்கள் மத்தியில் தவிப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் திருச்சியைச் சேர்ந்த பெற்றோர்கள் ஆனந்த பத்மநாபன், சுஜாதா உள்ளிட்டோர்.

மேலும்,பொதுவான பள்ளிகளின் 10-ஆம் வகுப்பு மாணவர்களின்  காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள்,  வருகை பதிவேடு ஆகியற்றின் அடிப்படையில் தற்போது மதிப்பெண்  வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளையும் பள்ளிகள் முடித்து விட்டன. ஆனால், பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் ஆல் பாஸ் தேர்ச்சிக்கான நடைமுறை தனித்தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு  எழுத இருந்த சிறப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கும் பொருந்தாது. காரணம்  அவர்களின் உடல் நிலை, மன நிலையின் அடிப்படையில் தொடர் வருகைப் பதிவும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடைமுறையில் சாத்தியமில்லை.

சிறப்புப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கருதி கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கும் வகையில் வழிகாட்டுதல்களை உடனே வழங்க வேண்டும் என்று சிறப்பு பள்ளி ஆசிரியர்களின் குரலாக திருச்சியில் உள்ள தனியார் சிறப்புப் பள்ளி  தலைமை ஆசிரியை விஜி.

மற்ற மாணவர்களைப் போல தேர்வு எழுத தயாராக இருந்தும் தங்களின் தேர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வழிகாட்டுதல் இல்லாததால் சிறப்புப் பள்ளிகளின் மாணவர்கள்பெற்றோர்கள்  மன உளைச்சலில் உள்ளனர். இதைப் போக்க சிறப்பு பள்ளிகளின் மாணவர்களும் ஆல் பாஸ் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பே அவர்களுக்கு நிம்மதியைத் தரும்

No comments: