Header Ads

Header ADS

ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்



ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்கள் வருவதாகவும் எனவே ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி,சரண்யா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் பரிந்துரைகளின்படி, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் வேண்டும் என்றும், அதற்குள் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் வகுத்து வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.