Header Ads

Header ADS

தனியார் பள்ளிகள் நாளை போராட்டம்

CLICK HERE TO DOWNLOAD




'பள்ளி வாகனங்கள் ஓடாத காலத்துக்கு, வரி செலுத்த கட்டாயப்படுத்துவதை எதிர்த்து, நாளை போராட்டம் நடத்தப்படும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.., பள்ளிகள் சங்க செயலர், நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை:

கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச், 17 முதல் இன்று வரை, எந்த சாலையிலும் பள்ளி வாகனங்கள் ஓடவில்லை. இந்நிலையில், பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் உரிமம் நீட்டிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என, அரசு வற்புறுத்துகிறது. வரிகளை கட்டாவிட்டால், 100 சதவீதம் அபராதம் என, அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆண்டு, சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் கட்டணம் ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இதுகுறித்து, வாகன உரிமையாளர்கள் சங்கத்துடன், பள்ளிகள் சங்கமும் இணைந்து, நாளை தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.