'இன்ஸ்பையர்' விருது மாணவர்களுக்கு அழைப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 2, 2020

'இன்ஸ்பையர்' விருது மாணவர்களுக்கு அழைப்பு





மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில்,
நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: