Header Ads

Header ADS

வேலை இல்லாதவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கடன்! தமிழக அரசு அதிரடி!!




ஊரக மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ்  தமிழகத்தில் வேலையற்ற தொழிலாளர்களுக்கு அரசு ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்குகிறது.

கிராமப்புற ஏழைகளுக்கு உதவி செய்ய கடந்த 2011ஆம் ஆண்டு ஆஜீவிகா என்ற தேசிய இயக்கம் மத்திய ஊரக வளர்ச்சிக்கான அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வசதியை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2020-21 நிதியாண்டில் தமிழகத்தில் உள்ள 1,49,160 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,274.40 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதர மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் தங்களது வேலைகளை இழந்து வீட்டிற்குத் திரும்பியுள்ள தொழிலாளர்கள் சொந்தமாக வர்த்தகம் செய்வதற்காக ரூ.1 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு ஆண்களுக்கு 18 முதல் 35 வயது வரை, பெண்களுக்கு 18 முதல் 40 வயது வரை. பயனாளிகள் கடனைப் பெறுவதற்கு ஊரக வட்டங்களில் உள்ள வறுமை ஒழிப்புத் திட்ட அலுவலகங்களையோ அல்லது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களையோ அணுக வேண்டும். 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.