இலவச கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
கடந்த 2010-ம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி
கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் மாணவர்கள், கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள் பெற்றோரை இழந்த பிள்ளைகள் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவைப் பெண்களின் பிள்ளைகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேதி வரை
விண்ணப்பிக்கலாம். இணையத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment