Header Ads

Header ADS

இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு-மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்





கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் பணி ஓய்வு பெற்ற பணியாளர் சிலருக்கு வழக்கமான ஓய்வூதியத்திற்கான உத்தரவு கிடைக்கப்பெறாமல் போயிருக்கும் எனவும்,
இதனால், வழக்கமான நிரந்தரமான ஓய்வூதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இடைக்கால ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு பணியாளர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஆறு மாதம் வரை தேவைப்பட்டால் ஓராண்டு வரை இடைக்கால பென்ஷன் தொகை தொடரும் என்றும், விருப்ப ஓய்வு பெறும் பணியாளருக்கும் இந்த சலுகை கிடைக்கப் பெறும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.