Header Ads

Header ADS

பள்ளிகள் திறப்பு அரசின் நிலை என்ன?




 கோடை விடுமுறை முடிந்து இன்று ...
கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவே இல்லை. மார்ச் 23ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் விடுமுறை இன்னும் தொடர்வதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இந்திய அளவில் பெற்றோர்கள் மனத்தில் அலைபாயும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்ற பதற்றமும் பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. ஆன்லைன் கல்வியிலும் மாணவர்கள் முழுமையான முறையில் சேரவில்லை என்பதே டிஜிட்டல் இந்தியாவின் நிதர்சன நிலை.

இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை இன்று வரை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. நாடு முழுதும் சுமார் 25 கோடி மாணவர்கள் கொரோனா ஊரடங்கால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தப் பின்னணியில் கடந்த ஜூலை 15ஆம் தேதி ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுடனும் பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறது. அதில் பல மாநிலங்களும் பல கருத்துகளைச் சொல்லியிருக்கின்றன. இந்தக் கருத்துகளை அமைச்சகம் ஓர் ஆவணமாகத் தொகுத்து இன்று (ஜூலை 20) மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளது.

அந்த ஆவணங்களில் மாநிலங்கள் என்ன சொல்லியுள்ளன?

நாட்டிலுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சம் 36 மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை, எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ளன. 5 மாநிலங்கள் இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் தேவை என கூறியுள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இப்போதைக்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பது பற்றி எந்த ஆயத்தமும் இல்லை என்று தெளிவாகக் கூறியிருக்கின்றன. டெல்லி மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே... ஜூலை இறுதியில் பள்ளிகளைத் திறக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்ன ஒரே மாநிலம் அசாம் மட்டுமே

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.