ஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 31, 2020

ஆன்லைன் கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு - தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்




தமிழக பள்ளி கல்வித்துறை ஆன்-லைன் வழிக் கல்வி திட்டத்திற்கான விதிமுறைகளை நேற்று வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக, விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டமானது குழந்தைகள், பெற்றோருக்கு மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஏழை - எளிய - குடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரால், ஆண்ட்ராய்டு செல்போன், மடிக்கணினி வாங்க முடியாத சூழல் இருப்பதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக ஆன்-லைன் வகுப்பில் பங்கேற்றால் குழந்தைகளுடைய கண்கள் பாதிக்கப்படும் என அரசு மருத்துவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதையும் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டம் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமையை பறிப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments: