SSLC - காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது? அமைச்சர் பதில். - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, June 12, 2020

SSLC - காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது? அமைச்சர் பதில்.




''எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வர் தேர்ச்சி குறித்து, அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:எஸ்.எஸ்.எல்.சி., மாணவ - மாணவியரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் தலா, 40 சதவீதம், வருகை பதிவேடு அடிப்படையில், 20 சதவீதம் என, கணக்கிட்டு 
மதிப்பெண் வழங்கப்படும்.அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து பரிசீலிப்போம்.

தனித் தேர்வர்களுக்கு, எந்த முறையில் தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து, அரசு பரிசீலனை செய்யும். இது பற்றி, முதல்வர் தலைமையில் ஆலோசனை செய்து, முடிவு எடுக்கப்படும்.நுாலகங்களை திறப்பது குறித்து, அரசு அறிவிக்கும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்லும்போது, தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் பாடத் திட்டத்தை குறைப்பது குறித்து, 16 பேர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கோவில் திறப்பது குறித்த அரசின் முடிவை, அமைச்சர் ஜெயகுமார் தெரிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: