Header Ads

Header ADS

QR CODE முறையில் நேரடியாக டிக்கெட்டுக்கு பணம் கொடுக்காமல் பஸ்சில் பயணம் செய்வது எப்படி?




கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் எம்டிசி பஸ்களில் சோதனை முறையில் க்யூ.ஆர்.கோடு மூலம் பயணச்சீட்டுக்கான கட்டணம் செலுத்தும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்துவதற்கு பயணி- நடத்துனர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எம்டிசி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
 
இதுகுறித்து எம்டிசி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்டெப்-1: பயணி தான் செல்ல வேண்டிய இடத்திற்கான பயண கட்டணம் குறித்து கேட்பார்.

ஸ்டெப்-2: நடத்துனர் கட்டணத்தைதெரிவிப்பார்.

 

ஸ்டெப்-3: பயணி பணம் செலுத்தும்போது பஸ்சின் உட்புறம் ஒட்டப்பட்டிருக்கும்க்யூ.ஆர்.கோட்டை ஸ்கேன் செய்து, நடத்துனர் தெரிவித்த கட்டணத்தை செயலி மூலம் செலுத்துவார்.

ஸ்டெப்-4: பணம் செலுத்தப்பட்டவுடன் பயணிக்கு அவரது செயலி மூலம் பரிவர்த்தனைகான முகவரி,  பணம், பஸ் எண், தேதி மற்றும் நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும்.

ஸ்டெப்-5: பயணி பணம் செலுத்தியவுடன், அவர் செலுத்திய கட்டணம் நடத்துனர் இருக்கை அருகே பொருத்தப்பட்ட ஸ்பீக்கரில் தெரிவிக்கப்படும். பிறகு நடத்துனர் பயணி பணம் செலுத்திய விவரம் பயணியின் கைபேசியில் வரும் எஸ்எம்எஸ்சை சரிபார்த்து பயணசீட்டு வழங்குவார்.
 
ஸ்டெப்-6: மேலும் நடத்துனரிடம் உள்ள கைபேசியில் வரும் எஸ்எம்எஸ்சை பார்த்து தான் வழங்கிய பணச்சீட்டு சரிதானா என்பதை சரிபார்த்து ெகாள்வார்.

ஸ்டெப்-7: நடத்துனர் அந்தந்த ஸ்டேஜ்க்கு உண்டான அனைத்து பயணசீட்டை வழங்கிய பின்னர் வழக்கம்போலடிஆர்ல் பயணசீட்டு எண் குறிக்கும் போது, யூபிஐ செயலி மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பயணசீட்டு விவரத்தை பட்டியலில் பூர்த்தி செய்வார்.

ஸ்டெப்-8:ஒவ்வொரு ட்ரிப் முடிவின் போது க்யூ.ஆர்.கோடு செயலி மூலம் பயணசீட்டு விற்கப்பட்ட கட்டண விவரத்தை நடத்துனர்டிஆர்ல் சமன் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.