M.Phil / Ph.D ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் ஓராண்டு நீட்டிப்பு!
எம்ஃபில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஓராண்டு நீட்டித்து உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஊரடங்கு காரணமாக பிஎச்டி, எம்ஃபில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
யுஜிசி அறிவுறுத்தல்
இதையடுத்து ஆராய்ச்சி மாண வர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க குறைந்தது 6 மாதங்கள் வரை பல்கலைக்கழகங்கள் அவ காசம் தரவேண்டும்
என யுஜிசி அறிவுறுத்தியது. அதன்படி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஓராண்டுக்கு நீட் டித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் அபூர்வா, அனைத்து பல்கலை. பதிவாளர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த கல்வி ஆண்டுடன் (2019-20) அவகாசம் முடிந்த எம்ஃபில், பிஎச்டி மாண வர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், தேர்வுகளை எழு தவும் ஓராண்டுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
அதேநேரம் மாணவர்களுக் கான வாய்மொழி திறனறித் தேர்வை காணொலி காட்சி வழி யாகவே நடத்த வேண்டும். ஒரு போதும் மாணவர்களை நேரில் அழைத்து திறனறித் தேர்வை நடத்தக் கூடாது. மேலும், உயர் கல்வித் துறை சார்பாக மறு உத்தரவு வரும் வரை அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரி கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment