CBSE -10 & 12 பொதுத்தேர்வு ரத்து - தேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு.
10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகளை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.
10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்ட பொதுத்தேர்வு பாடங்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனோ தாக்கம் குறைந்த பிறகு தங்கள் மதிப்பெண்களை உயர்த்துவதற்காக சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்படும்.ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகளுக்கு இந்த சிறப்பு தேர்வு நடைபெறும். விரும்பும் மாணவர்கள் சிறப்பு தேர்வில் பங்கேற்கலாம்.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்,
3 தேர்வுகளுக்கு அதிகமான பாடங்களை எழுதிய மாணவர்களுக்கு எந்த 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் அதிகமோ அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும்.
பொதுத்தேர்வில் 3 பாடங்களை மட்டும் எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் மூன்றில் எந்த 2 பாடங்களில் அதிக மதிப்பெண் உள்ளதோ அதன் அடிப்படையில் கணக்கிடப்படும்.
டெல்லியில் பொதுத்தேர்வு ஒன்றிரண்டு பாடங்களுக்கு மட்டும் நடத்தப்பட்டதால் அந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் அவர்கள் பெற்ற செய்முறை தேர்வு மதிப்பெண்,
உள்மதிப்பீட்டு மதிப்பெண், ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
மேலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடைபெறாது என்றும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment