ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு இந்திய ஜனாதிபதி பெயர் கூட தெரியாத நிலை!
உத்தர பிரதேச மாநிலத்தில் அண்மையில் காலியாக உள்ள 69,000 ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளதாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த
வழக்கில் பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநியமனத்தை உயர்நீதிமன்றம்
ரத்து செய்தது. இதை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி கூறுகையில், “இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் '
தேர்வில் முதலிடம் பிடித்த தர்மேந்திர படேலை விசாரிக்கையில் பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே அவர்களிடம் பதில் இல்லை. இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கேட்டால் கூட தெரியவில்லை“ என்று கூறினார்.
இந்த
மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
No comments
Post a Comment