சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை வெளியிடுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் சிறந்த 3 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூரு, டெல்லி
ஐஐடி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்:
1. இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை (சென்னை ஐஐடி)
2. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம்
3. இந்திய தொழில்நுட்ப கழகம் டெல்லி (டெல்லி ஐஐடி)
சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியல்;
1. பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்துள்ளது.
2. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 3-ம் இடம் பிடித்துள்ளது.
No comments
Post a Comment