Header Ads

Header ADS

சீக்கிரம் மொபைல் டேட்டா காலியாகிறதா? தடுப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!


சீக்கிரம் மொபைல் டேட்டா ...
குறிப்பாக பேஸ்புக் உள்நுழைந்து வெளியே வரும் 1ஜிபி முதல் 1.5ஜிபி வரை டேட்டா காணாமல் போய் இருக்கும். இதில் இருந்து தப்பிக்க இரண்டு

வழிகள் உள்ளது, ஒன்று இமேஜ் மற்றும் தரத்தை குறைப்பது, இரண்டாவது

டேட்டா சேவரை எனேபிள் செய்வது ஆகும்.
 
இமேஜ் மற்றும் தரத்தை குறைப்பது:

வழிமுறை-1

ஸ்மார்ட்போனில் பேஸ்புக் செயலியை திறக்கவும்.
 
வழிமுறை-2:

அடுத்து பேஸ்புக்கில் இருக்கும் Hamburger icon-ஐ கிளிக் செய்யவும், ஐபோன் பயனராக இருந்தால் இடது பக்கத்தில் இருக்கும்.

வழிமுறை-3:
 
பின்பு Settings விருப்பத்தை தேர்வு செய்து Settings and Privacy-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4

அதன்பின்பு ஸ்கோரோல் டவுன் செய்து Media and Contacts விருப்பத்திற்கும் நுழையவும்.இப்போது மற்றும் புகைப்படங்களுக்கான விருப்பங்களை காண்பீர்கள், அதில் Videos in News Feed start with Sound, செட்டிங்ஸ்-ன் கீழ் Upload HD button மற்றும் போட்டோ செட்டிங்ஸ்-ன் கீழ் Upload HD photo போன்ற பல விருப்பங்களை காண்பீர்கள். இப்போது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனேபிள் மற்றும் டிஸேபிள்களை மாற்ற முடியும்.

டேட்டா சேவர்:

பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவர் எனும் விருப்பத்தை வழங்குகிறது, அதன்படி Image size-ஐ குறைத்தல் மற்றும் ஆட்டோ-பிளே வை முடக்குதல் போன்றவைகளை நிகழ்த்தி, உங்களின் டேட்டாவை சேமிக்க முடியும். இதை செய்வது எப்படி பார்ப்போம்.
 

பேஸ்புக்கில் இருக்கும் Hamburger icon-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்து Settings and Privacy என்பதை கிளிக் செய்யவும்.
பின்பு Data Saver விருப்பத்தை கிளிக் செய்து எனேபிள் செய்தால், கண்டிப்பாக உங்கள் டேட்டாவை சேமிக்க முடியும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.