Header Ads

Header ADS

குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான முதலீடுகள்





குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களின் எதிர்காலத்துக்கு பெற்றோர் திட்டம் தீட்ட தொடங்கி விடுகின்றனர். பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகள் ஏராளம். இதற்கு சேமிப்பு மட்டுமே போதாது. அதையும் தாண்டி பலன் தர சில திட்டங்கள் இருக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு
பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்துகிறது. கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர் கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும் திட்டங்கள் இவை. சிலர் பெண் குழந்தைகளுக்கு தங்க நகையாக வாங்கி சேமிக்கின்றனர். இதற்கு பதிலாக, தங்க இடிஎப் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தைகளில் ரிஸ்க் அதிகம். நல்ல பலன் என்றாலும் எச்சரிக்கையாக முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும்.
 
 பிபிஎப் மற்றும் நீண்டகால வைப்பு நிதிகளும் நல்ல திட்டங்கள்தான். பெரிய தொகையை முதலீடு செய்து குறிப்பிட்ட இடைவெளியில் பலன் பெறலாம். சில காப்பீட்டு திட்டங்கள் பெற்றோருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் கூட குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதத்தில் உள்ளன. சுமார் 26 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்காக இத்தகைய காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர் என முதலீட்டு ஆலோசனை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்யலாம். இது நீண்ட கால பலனுக்கு ஏற்றது. ஆனால், விலை உச்சதில் சென்ற பகுதியில் வாங்காமல், நகரத்தை ஒட்டிய, வளர்ந்து வரும் பகுதியில் வாங்கினால் சிறந்த பலன் தரும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.