Header Ads

Header ADS

ஆசிரியர்களுக்கு இதற்கெல்லாமா தமிழகத்தில் தடை?


press%2Bmeet

முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி, பேட்டி கொடுக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி கல்வி அமைச்சர்
செங்கோட்டையன் மட்டுமே, ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ் குமாரும், தனியாக பேட்டி அளிப்பதில்லை.

இந்நிலையில், அமைச்சரின் சொந்த மாவட்டமான, ஈரோடு மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில், தன்னிச்சையாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி
ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது
'ஆசிரியர்கள், தங்களின் சங்கங்கள் சார்ந்து, அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதால், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. அதை தடுக்கும் வகையில், இந்த அறிவிப்பு உள்ளது' என, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.