Header Ads

Header ADS

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடிய உணவுகள்



தக்காளி உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நிறைய தக்காளி சாப்பிடுவதுடன் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இதிலுள்ள அசிடிக்  அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.


இஞ்சி மற்றும் பூண்டு இஞ்சி மற்றும் பூண்டு கலந்த உணவுகளை தினமும் 3 முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சூப், ரசம் செய்து கூட தினமும்  சாப்பிடலாம்.


சீரகம் 1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சீரகத்தை நீர் மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த முறையை சரியாக பின்பற்றுவதன்  மூலம் 3 மடங்கு உடல் கொழுப்பை எளிமையாக கரைக்கலாம்.
ஊறவைத்த
வெந்தயம் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அந்த வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த ஊறவைத்த நீரை குடிக்க வேண்டும். இப்படி  தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும்.


பேரிக்காய்: பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுப்பதுடன், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.
 

முருங்கை
இலைச்சாறு முருங்கை இலை அதிக இரும்புச் சத்து கொண்டது. அத்துடன் கொழுப்பை கரைத்து உடல் இளைக்கவும் உதவுகிறது. தினமும் இருவேளையில் முருங்கை இலைச்சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.


பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை  சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்🔵🔴

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.