Header Ads

Header ADS

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் மத்திய அரசு உத்தரவு



பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கை அனுப்ப வேண்டும் மத்திய அரசு உத்தரவு

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து கல்வி நிறுவனங்கள், பெற்றோருடன் ஆலோசித்து அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
 
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு தற்போதும் நடைமுறையில் இருக்கிறது.
 
இதனால் பள்ளிகள் திறப்பு குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கருத்துகளை அனுப்ப வேண்டும் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து, ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனத்தை சார்ந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

 அவ்வாறு நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் உருவான கருத்துகளை அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் கருத்துகளை கொண்டு கல்வி நிறுவனங்களை சரியான நேரத்தில் திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியும்.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து தரப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு.பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை


வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்:

ஒவ்வொரு வகையான பள்ளியிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் கருத்து கேட்க உத்தரவு.

தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு சமர்ப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.

நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப பள்ளிகல்வித்துறை இயக்குநர் உத்தரவு.



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.