பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள - அரசாணை எண் 304 நாள் 17 .6. 2020க்கான விளக்கம்
🎯 *தமிழக அரசு ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராவிட்டால் உரிய விடுப்பாக கருதப்படும்*
🎯மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு காலத்தில் உள்ளவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பணிக்கு வர முழு விலக்கு
🎯55 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் co- mobidities உரிய மருத்துவச் சான்றின் பேரில் ஊரடங்கு காலப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
🎯25.3.2020 முதல் 17.5.2020 வரை அனைவருக்கும் பணிக்காலமாக கருதப்படும்
🎯25.3.2020 க்கு முன் நீண்ட விடுப்பில் சென்று விடுப்பு காலம் முடிந்திருந்தாலும்
3.5.2020 வரைபணியில் சேர முடியாதவர்கள் பணியில் சேர்ந்த்தாக கருதப்படுவர்
🎯18.5.2020 முதல் .அதாவது 50% பணியாளர்கள் அலுவலகம் வர ஆணையிட்ட பிறகு ,ஒரு நாள் கூட பணிக்கு வராதவர்கள் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை தகுதி உள்ள விடுப்பாக கருதப்படும்
🎯தனக்கு சுழற்சி முறைப்படி பணி நாளாக அறிவிக்கப்பட்ட நாளில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்கள் அடுத்து பணிக்கு வரும் நாள் வரை விடுப்பாக கருதப்படும்
🎯கோவிட்19 அல்லாத மருத்துவ காரணங்களுக்கு உரிய மருத்துவச் சான்றின்பேரில் விடுப்பு வழங்கலாம்
🎯தனக்கோ குடும்ப உறுப்பினருக்கோ கோவிட்19 தொற்று இருந்தால் அல்லது தனிமைப்படுத்தப்பட்டால் உரிய சான்றிதழ் பேரில் அக்காலம் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும்
இந்த
ஆணை வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள, மாநகராட்சிகள்,கார்ப்பபல்கலைக்கழகங்கள்,வாரியங்கள் நிறுவனங்களுக்கும் பொருந்தும்
No comments
Post a Comment