ஆன்லைன் வகுப்பு:செல்போன் சிக்னலுக்காக தினமும் 10 கிமீ பயணிக்கும் மாணவன்
ஆன்லைன் வகுப்பு:செல்போன் சிக்னலுக்காக தினமும் 10 கிமீ பயணிக்கும் மாணவன்
ஆன்லைன் வகுப்புகளை சத்தீஷ்கர் மாநிலம் முன்னெடுத்து நடத்தினாலும், பல காரணங்களால் மாணவர்களை சென்று சேரவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.
கொரோனாவால் உலக நாடுகள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளன. இந்தியாவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த போராடி வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்துவிட்டன. தொற்று நோய் பரவி வரும் சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது நடக்காத காரியம்.இதனால் சில மாநில அரசுகள் ஆன்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.
பாடங்களை மாணவர்கள் மறந்துவிடாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகள் உதவும் என மாநில அரசுகள் விளக்கம் அளித்தாலும், எல்லா மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்தும் அளவுக்கு வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி.சத்தீஷ்கரில் ஏப்ரல் 7ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 20 லட்ச மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகளை பெறும் அளவுக்கு சத்தீஷ்கரில் போதுமான வசதிகள் பல இடங்களில் இல்லை எனக் கூறப்படுகிறது.
மூடியம் சுக்கால் என்ற 17 வயது சிறுவன் தினமும் தனது கிராமத்தில் இருந்து 10 கிமீ சைக்கிளில் பயணம் செய்து தனது உறவினர் வீட்டிற்கு செல்கிறான்.தனது கிராமத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தால்தான் செல்போன் சிக்னல் கிடைக்கும் என்றும், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியும் என்றும் சுக்கால் தெரிவித்துள்ளான். சத்தீஷ்கரின் பல கிராமங்களின் நிலைமை இப்படித்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
முர்கா என்ற கிராமத்திலுள்ள 500 பேரில் 3 பேரிடம் மட்டுமே ஸ்மார்போன் உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியின்படி, பல் பெற்றோர்களிடன் ஸ்மார்ட்போன் வசதி இல்லை என்றும், சிலரிடம் இருந்தாலும் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலும் இணையவசதி, நேரமின்மை போன்ற பல தடைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரொனா நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் போன்ற முன்னெடுப்புகளை அரசு எடுத்தாலும் அது அனைத்து மாணவர்களையும் சென்று சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
No comments
Post a Comment