Header Ads

Header ADS

10ம் வகுப்பு மதிப்பெண் பதிவுக்கு குழு அமைப்பு: செங்கோட்டையன்







''பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், பாட வாரியாக, மதிப்பெண் பதிவு செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை
பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, அதன் விபரங்களை, அரசு பள்ளிகள், 100 சதவீதமும், தனியார் பள்ளிகள், 75 சதவீதமும் எங்களுக்கு ஒப்படைத்து உள்ளன.பத்தாம் வகுப்பினருக்கு, மதிப்பெண் சான்றிதழ் எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.சான்றிதழில் பாட வாரியாக, மதிப்பெண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு முடிவுகளை, ஜூன் 22ல் எங்களிடம் ஒப்படைப்பர். அந்த முடிவுகள், முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும்.தனியார் மற்றும் அரசு பள்ளிக்கு உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டி, கல்வித்துறை அலுவலர்கள், தங்கள் கருத்துகளை வெளியிடக் கூடாது. நடத்தை விதிகளை மீறி, கல்வித் துறையினர் செயல்படக் கூடாது என, அனைத்து, சி...,களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சிலபள்ளிகளில், 'ஆன்லைன்' மூலமாக, தேர்வு நடப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு, எவ்வாறு கல்வி கற்றுத் தரலாம் என்பது குறித்து, துறை ரீதியாக கலந்து பேசி, முடிவு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.