பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பயிற்சி: சிபிஎஸ்இ ஏற்பாடு பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பயிற்சி: சிபிஎஸ்இ ஏற்பாடு
சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மேலும் கற்பித்தல் திறன் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் ஆசிரியர் பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதில் நாடு முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ள
நிலையில், கல்வி கற்பித்தல் முடங்கிப் போயுள்ளது. இந்த நேரத்தில் தொழில் மேம்பாட்டுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல் உதவியுடன் தீவிரப்படுத்துவது தேவையாக உள்ளது. இதையடுத்து, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பயிற்சி பெறும் வகையில் புதிய பயிற்சி திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இந்த
பயிற்சி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முடிக்கும் ஆசிரியர்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் பல்வேறு வகையான வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு வகுப்பும் தலா ஒரு மணி நேரம் ந டக்கும். இதன் படி நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் நடத்தப்படும். மே மாதத்தில் 1200 ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் வகையில் சிபிஎஸ்இயின் உயர் சிறப்பு மையம் திட்டமிட்டுள்ளது.
அந்த
வகையில் நாடும் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் என மொத்தம் 35 ஆயிரம் பேர் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி ஏற்னெவே ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தற்போது இந்த பயிற்சி தொடங்கப்பட உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர்.
No comments
Post a Comment