பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார்
வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.
No comments
Post a Comment