Header Ads

Header ADS

பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


Mistake over antiquity of Tamil sparks furore - The Hindu


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசு ஆலோசனைகூட செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அனைத்திலும் சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுகுறித்து ஆலோசனை கூட செய்யவில்லை.
 
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றுதான் கூறி உள்ளேன். கொரோனா வைரஸ் உள்ள நிலையில் ஆன்லைனில்தான் பாடம் நடத்த முடியும். சி.பி.எஸ்.. பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும், தனியார் நடத்துவதாலும் அவர்கள் முடிவெடுத்து உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்காக மூன்று மடங்கு தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுகின்றனர்.

ஆனால், கொரோனா வைரஸ் எப்போது முடியும் என யாராவது கூறுகின்றனரா? மாணவர்களுக்கு அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். மாணவர்கள் உயிர் எங்கள் உயிரைவிட மேலானது.முதல்வர் தலைமையில் அனைத்து துறைகளையும் ஆலோசனை செய்துதான் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்த பள்ளியில் படித்தார்களோ அதே பள்ளியில் தேர்வு எழுதும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.