அடிக்கோடிடுதல் மூலம் எவ்வாறு ஆங்கில வார்த்தைகளை வாசிக்கச் செய்வது ?
independent
Basic
Syllable Chart ல் மாணவருக்கு நன்கு பயிற்சி கொடுத்திருந்தால் independent என்ற பெரிய வார்த்தையை கீழ்க் கண்ட படி நிலைகள் வழியாக எளிதாக வாசிக்கச் செய்யலாம்.
1. முதலில் independent வார்த்தையை syllable படி பிரித்து எழுத வேண்டும்.
in - de -
pen - dent
2. முதல் syllable ஆக வந்திருக்கும்,
in வார்த்தை Basic Syllable Chart ல் வந்திருப்பதால், மாணவன் எளிதாக வாசித்து விடுவான்.
3. இரண்டாவது syllable ஆக வந்திருக்கும் de ம், Basic Syllable Chart ல் வந்திருப்பதால் எளிதாக வாசித்து விடுவான்.
4. in - de வரை அடிக்கோடிட்டு, சேர்த்து வாசிக்கச் சொல்ல வேண்டும். இதை எளிதாக வாசித்து விடுவான்.
5. மூன்றாவதாக pen என்ற syllable ஐ உச்சரிக்க, முதலில் en என்பதை அடிக் கோடிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும். en என்பதும் Basic Syllable Chart ல் வந்திருப்பதால் எளிதாக வாசித்து விடுவான்.
6. பிறகு pen என்பதற்கு அடிக்கோடிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும். இதையும் வாசித்து விடுவான்.
7. அடுத்து in - de - pen வரை அடிக்கோடிட்டு சேர்த்து வாசிக்கச் சொல்ல வேண்டும். இதையும் எளிதாக வாசித்து விடுவான்.
8. dent என்ற syllable லில், en மட்டும் அடிக்கோடிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும். பிறகு ent எழுத்துக்களுக்கு அடிக் கோடிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும். இதன் பிறகு dent எழுத்துக்களுக்கு அடிக்கோடிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும்.
9. இப்போது
in - de - pen - dent
என்ற
முழு வார்த்தைக்கும் (4 syllables க்கும் மொத்தமாக) அடிக் கோடிட்டு வாசிக்கச் சொல்ல வேண்டும். இதையும் எளிதாக வாசித்து விடுவான்.
10. இவ்வாறு பன்முறை வாசிக்க பயிற்சி அளித்து, syllables படி பிரித்து பல முறை எழுத வைத்து, பிறகு syllables பிரிக்காமல், மொத்தமாக independent என வாசிக்கவும், பார்க்காமல் எழுதவும் பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு பயிற்சி அளிப்பது, முதலில் சற்று சிரமமாக இருந்தாலும், நாளடைவில் மேற்சொன்ன படிநிலைகளை பின்பற்றி, அடிக்கோடிட்டுக் காட்டினாலே மாணவன் எளிதாக வாசித்து விடுவான்.
இவ்வாறு பயிற்சி அளிப்பதன் மூலம், எவ்வளவு பெரிய வார்த்தையையும், syllables படி பிரித்து, மிக எளிதாக வாசிக்க வைக்க முடியும்.
No comments
Post a Comment