Header Ads

Header ADS

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள்!



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள் , சென்னை -600006

..எண் .001002 / 02 / 2 / 2020

நாள் 15.05.2020

பொருள் பணியமைப்பு- கொரானா வைரஸ் ( Corono Virus ) ஊரடங்கு அரசால் 18.05.2020 முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் அறிவிக்கப்பட்டமை -50 % பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிதல் - சார்பு .

பார்வை அரசாணை ( நிலை ) எண் .239 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் .15.05.2020 . =
 
==== கோரானா வைரஸ் தொற்று காரணமாக அரசால் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட பிறகு தற்போது நடைமுறைகள் அரசால் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறித்து பார்வையிற்காண் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

அதனடிப்படையில் 18.05.2020 முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் ( சனிக்கிழமை உட்பட ) அரசு அலுவலகங்கள் பணியாற்ற வேண்டும் , எனவும் , 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனால் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களும் 18.05.2020 முதல் சுழற்சி முறையில் அலுவலகப் பணிக்கு வருகை தரவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது .

தனிநபர் இடைவெளியை பின்பற்றிட ஏதுவாக ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய பணியாளர்கள் குறித்து 18.05.2020 அன்று உரிய அறிவுரைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது .

பெறுநர்

அனைத்து வகை பணியாளர்கள் இணை இயக்குநர் ( பணியார் தொகுதி ) பள்ளிக் கல்வி இயக்ககம் , சென்னை -6
 
 நகல்

 பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவி அலுவலர் நகல் முதுநிலைக் கண்காணிப்பாளர் , பள்ளிக் கல்வி இயக்கககம் ,

சென்னை -6

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.