Header Ads

Header ADS

பள்ளி மாணவர்களின் குடும்பங்கள், வயதான, ஆதரவற்ற பெண்கள், சுகாதாரப்பணியாளர்கள், கண்பார்வை அற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி சார்பாக ₹.1,80,889 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கல்







 


*பள்ளி மாணவர்களின் குடும்பங்கள்வயதானஆதரவற்ற பெண்கள்சுகாதாரப்பணியாளர்கள்கண்பார்வை அற்றோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி சார்பாக ₹.1,80,889 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் உதவி தொகை வழங்கல் *


திருச்சி மாவட்டம்தென்னூர், *சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில்படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் இன்று (7-5-2020) அத்தியாவசிய மளிகைப் பொருட்கள்  (₹.641.75) மற்றும் ரொக்கம் ₹.500 அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.  பொருட்கள் வழங்கப்படும் போது அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சமூக இடைவெளியிடனும்,  முக கவசம் அணிந்தும்,  கிருமி நாசினி திரவம் கொண்டு கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் பொருட்கள் தொகுப்பு *125 குடும்பங்களுக்குவழங்கப்பட்டது
இத் தொகுப்பில் அரிசி ஐந்து கிலோ , துவரம் பருப்பு , சர்க்கரை , கோல்டுவின்னர் எண்ணெய்மஞ்சள் தூள்மிளகாய்த்தூள் , சாம்பார் தூள் , மல்லித்தூள் , டீ தூள் , வெந்தயம் , சோம்பு , சீரகம் , கடுகு , சால்ட் உப்பு,  கோதுமை , விம்சோப்பு , ரின் சோப்புரவை , மிளகாய் , கொண்டகடலை உட்பட் 20 பொருள்கள் இருந்தன .  மேற்கண்ட மளிகைப்பொருட்கள் தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் பங்களிப்புடனும்,
ShineTREEchy அமைப்பு மூலமாகவும் இணைந்து *ரூ.641.75 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் தொகுப்பு 125 குடும்பங்களுக்கு ரூ.80,219 மதிப்பில் வழங்கப்பட்டது.*

*மேலும் தலைமையாசிரியர் அவர்களின் சொந்த பணத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.500 வீதம் ரொக்கமாக 125 மாணவர்களின் குடும்பங்களுக்கு (₹.62500) வழங்கப்பட்டது.*

முதல் கட்டமாக தலைமையாசிரியர் சார்பில் 125 குடும்பங்களுக்கும்  ரூ.100 மதிப்புடைய காய்கறிகள் பை + தன்னார்வலர் வழங்கிய ரூ.50 மதிப்புள்ள பேரிச்சை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.  *இதன் மொத்த மதிப்பு ₹.12,500 ஆகும்.*
 
மேலும் பள்ளி சாராத இதர பயனாளிகள் , வயதானஆதரவற்ற பெண்கள் , சுகாதார பணியாளர் உள்ளிட்ட 15 குடும்பத்திற்கு இன்று அரிசி மற்றும் மளிகை பொருட்கள்  அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது.   *இதன் மொத்த மதிப்பு ₹.9,626 ஆகும்.*

இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் ,  சிறுமலை மலைப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற கண் பார்வை அற்ற *25 குடும்பங்களுக்கு தொகுப்பு ஒன்று ரூ.641.75 வீதம் ரூ.16,044* மதிப்பிலான பொருள்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் திரட்டப்பட்டு இன்று வழங்கப்பட்டது.  இப்பொருட்களை அங்கு கொண்டு சேர்க்கும் திருஜோசப் அவர்களிடம் அப்பொருட்கள் நேரில் வழங்கப்பட்டன.  
 
இந்நிகழ்வில் மணப்பாறை சிப்காட் வட்டாட்சியர் திரு.  கோகுல்,  ShineTREEchy அமைப்பின்  நிறுவனர் திருமனோஜ் தர்மர்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் , வார்டு 50ன் மாநகராட்சி மேற்பார்வையாளர் திருநாகராஜ்பள்ளி ஆசிரியை சகாயராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆக *இன்று பள்ளி சார்பில் வழங்கிய பொருட்கள் மற்றும் உதவி தொகை சேர்த்த மொத்த மதிப்பு ரூ.1,80,889 ஆகும்*.





No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.