அறிவோம் அறிவியல் - இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது ?
இ-மெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் பயன்படுத்துபவரின் அடையாளமும் (user id) இரண்டாம் பகுதியில் இ-மெயில் அளிக்கும் நிறுவனத்தின் பெயரும் (domain name) இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. @ குறியீடு பயன்படுத்துபவரின்
அடையாளத்தையும் டொமைனின் பெயரையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.userid@domain name என்றுதான் இ-மெயில் முகவரி இருக்கும். உதாரணமாக Tinku@gmail.com என்றால், என்னுடைய பெயர் முதலிலும் @-க்குப் பிறகு டொமைனின் பெயரும் இருக்கிறது அல்லவா, இவை இரண்டும் சேர்ந்தால்தான் இ-மெயில் முகவரி. முன்னால் இருக்கும் பெயரை மாற்றி இன்னொரு இ-மெயில் முகவரியை உருவாக்கிக்கொள்ள முடியும்.
No comments
Post a Comment