Header Ads

Header ADS

கொசுக்களை விரட்ட எளிய வழி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!





கொசுவால் தான் அதிகப்படியான பாதிப்புகள் வருகிறது. குறிப்பாக மலேரியா, காய்ச்சல், டெங்கு போன்ற வியாதிகள் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் எளிதாக தாக்குகிறது.

நாம் நமது சுற்றுப்புறத்தை முதலில் சுத்தமாக வைத்து கொண்டாலே கொசு வாராது. அப்படி மீறி வரம் கொசுவை விரட்ட பலர் கொசுவத்தியை பயன்படுத்துகின்றனர். நாம் பயன்படுத்தும் கொசுவத்தியை பல நாடுகள் பயன்படுத்த தடை செய்யப்பட்ட நிலையில் நாம் என் அதை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக இயற்கையான முறையில் எளிதாக கொசுக்களை விரட்டலாம்.
 
வேப்ப எண்ணையை பயன்படுத்து வீட்டில் விளக்கேற்றி வையுங்கள். கொசு உடனே காணாமல் போயிடும்.
கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை சிறிது தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்தும் கொசுவை விரட்டலாம்.
 
புதினாவை லேசாக தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதிலிருந்து வரும் வாசனையால் கொசுக்கள் பறந்துவிடும்.

நீலகிரி மரம் எனப்படும் யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் ஒழியும்.
 
வேப்பெண்ணெயை ஒரு கப்பில் ஊற்றி கொள்ளவும், அதில் 2 கற்பூரத்தை அரைத்து போடவும். இப்போது பிரியாணிக்கு போடப்படும் இலையை எடுத்து அந்த எண்ணெயில் துவைத்து எடுத்து, அந்த இலையை தீக்குச்சியால் பற்ற வைத்து உடனே அணைத்து விடவும். இதில் இருந்து வெளியேறும் புகையால் கொசு வராது



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.