Header Ads

Header ADS

பேஸ்புக்கில் இனி 50 பேர் வரை வீடியோ சாட் செய்யலாம்



ஜூம் செயலிக்கு போட்டியாக, காலவரை எதுவுமின்றி 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாட கூடிய வகையில், 'மெசஞ்சர் ரூம்ஸ்' என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு செயலியை
பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜூம் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்ததால் கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்திருந்தன. இந்நிலையில், ஜூம் செயலிக்கு மாற்றாக பேஸ்புக் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது ?பேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் யாரை வேண்டுமானாலும் 50 பேர் வரை வீடியோ அழைப்பில் இணைத்து கொள்ள முடியும்.

வீடியோ அழைப்பிற்கு என குறிப்பிட்ட கால வரையறையும் எதுவும் இல்லை. பேஸ்புக்கில் கணக்கு இல்லாதவரும் வீடியோ அழைப்பில் இணையலாம். உலகளவில் புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும் முன், இந்த வாரத்தில் சில நாடுகளில் மெசஞ்சர் ரூம்ஸ் வசதி பயன்பாட்டுக்கு வருமென பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே 
சமூகவலைதளமான பேஸ்புக் தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. ஆனால் தற்போதைய புதிய வீடியோ அழைப்பு வசதி மிக கவனமாகவும், கடந்த காலங்களில் கற்ற பாடங்களின் அடிப்படையில் முயற்சி செய்திருப்பதாக மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்தார்.இருமடங்கான வீடியோ அழைப்புகள்:நாளொன்றுக்கு 70 கோடிக்கும் அதிகமானோர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் வீடியோ அழைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடியோ அழைப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது என பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் பிரைவசி பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது ரூம் கணக்கை யார் பார்வையிடலாம் என்பதை லாக், அன்லாக் என இரண்டு வாய்ப்புகள் மூலம் நீங்களே கட்டுப்படுத்த இயலும். ஒருவேளை அன்லாக்கில் இருந்தால், வீடியோ அழைப்பு லிங்க் மூலம் யார் வேண்டுமானாலும் இணைவதோடு, மற்றவர்களுடன் பகிர முடியும்.மெசஞ்சர் ரூமை உருவாக்குபவரே வீடியோ அழைப்பை துவங்க முடியும். அவர்கள் யார் இணையலாம் என்பதை கட்டுப்படுத்துவதுடன், எந்த நேரத்தில் வேண்டுமானால் பங்கேற்பவரை நீக்க முடியும்.
 
மேலும் பேஸ்புக் விதிகளை மீறுவோர் குறித்து புகார் அளிக்க முடியும். அதில் எந்த வீடியோ அல்லது ஆடியோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் பேஸ்புக் புகார்களை கேட்காது எனவும் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை உருவாக்குவதற்கான வழியை சேர்க்க திட்டமிட்டுள்ளது. போன் அல்லது கணினி மூலம் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியில் இணையலாம். எதையும் தரவிறக்கம் செய்ய தேவையில்லை எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.