10ம் வகுப்பு தேர்வு அட்டவணை தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார் நிலையில் உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, முதல்வர் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளார். எந்த கல்வி நிறுவனங்களும், பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. தேர்வு அட்டவணையும் தயார் நிலையில் உள்ளது.
பொதுத் தேர்வுக்கான தேதியை, சூழலை பொறுத்து, முதல்வர் தான் முடிவு செய்து அறிவிப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.
'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கும் முடிவு, ஏதேனும் இருக்கிறதா' என, நிருபர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், புத்தக பை, இலவச நோட்டு, புத்தகங்கள் என மொத்தம், 14 பொருட்கள் இலவசமாக கொடுக்கிறோம்.''அரசு பள்ளிகள் திறந்தே தான் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும், அட்மிஷன் போட்டு, சேர்ந்து கொள்ளலாமே,'' எனக் கூறி, நழுவினார்.
No comments
Post a Comment