Header Ads

Header ADS

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது..? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி


நான் பெரிய தொழிலதிபர் கிடையாது.. ஒரு ...



21 நாட்களுக்கு பிறகு கொரோனா நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே 10-வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது 198 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்\
அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அடுத்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும் என்றும் கூறியிருந்தார். கொரோனாவின் தாக்கல் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து வருகிறது. இதனிடையே, ஏப்ரல்10-ம் தேதிக்குள் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராவிட்டால், புதிய திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின. அதில், மாநில அளவிலான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு மாவட்ட அளவிலான தேர்வை நடத்தலாமா அல்லது காலாண்டு, அரையாண்டு முடிவுகளின் படி தேர்ச்சி அறிவிப்பை வெளியிடலாமா என ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்;- 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகே பள்ளித் தேர்வுகள் குறித்து ஆலோசிக்க முடிவு எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.