Header Ads

Header ADS

School Morning Prayer Activities- 11-03-2019


School Morning Prayer Activities- 10-03-2019


திருக்குறள்


அதிகாரம்:கல்லாமை

திருக்குறள்:403

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

விளக்கம்:

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

பழமொழி
 
Age is a symbol of maturity.

முதுமை,பக்குவத்தின் அடையாளம் .

இரண்டொழுக்க பண்புகள்

1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.

2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

இறுதியில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, நண்பர்களின் மௌனம் ஆகும்.

மார்ட்டின் லூதர் கிங்

பொது அறிவு

1.வெங்காயம் நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வர காரணமான வேதிப்பொருள் எது?

புரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு

2.நெகிழியை எரிக்கும் போது  வெளிவரும் நச்சுப்பொருளின் பெயர் என்ன?

 டையாக்சின்

English words & meanings

Need - in want of. தேவை.

Knead - to mix into a lump squeeze or press the thing. பிசைதல்

ஆரோக்ய வாழ்வு

 பெருஞ்சீரகத்தோடு உலர்திராட்சை பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இப்பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருவது நல்லது.

Some important  abbreviations for students

WXGA - Widescreen Extended Graphics Array

WVGA - Wide Video Graphics Array

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

சொந்த இடம்

அயோத்தியா நகரத்தில் சித்திராங்கன் என்ற ஒரு நாய் வாழ்ந்து வந்தது. நாள் தோறும் பசியில் வாடி, அலைந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த நாய், நாம் ஏன் உணவு கிடைக்காத இந்த நகரத்தில் அலைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து, நாம் வேறு ஒரு நகரத்திற்குச் சென்றுவிடலாமே! என்று நினைத்தது. தன்னுடைய சக நண்பர்களிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வேறொரு நகரத்திற்குச் சென்றது.

அங்கு ஒரு வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தது. அந்த வீட்டிலிருந்த எஜமானி அம்மா இந்த நாயைத் தன் வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதனைத் தன் பிள்ளைபோல வளர்த்து வந்தாள். அந்த நாய்க்கு நல்ல உணவும் மதிப்பும் இருந்து வந்தது.

ஒரு நாள் அந்த நாய் தன் எஜமானி அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவில் நின்றது.

அந்தத் தெருவில் வாழும் பிற நாய்கள் அந்த நாயைக் கண்டதும் விரட்டிக் கடிக்கத் தொடங்கின. இரத்தக் காயங்களோடு அந்த நாய் மீண்டும் அயோத்தியா நகருக்கே திரும்பி வந்தது.

அந்த நாயின் நண்பர்கள், என்ன நண்பா! புதிய நகரம் எப்படி இருந்தது? என்று விசாரித்தன.

அதற்கு அந்த நாய், அந்த நகரம் செழிப்பாக இருக்கிறது. அந்த நகரத்துப் பெண்கள் இரக்க குணமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அங்கிருக்கும் நம் இனத்தவர்கள்தான் சரியில்லை. அதனால் தான் நான் திரும்ப இங்கேயே வந்துவிட்டேன் என்றது.

ஆதலால், எப்போதும் சொந்த இடத்தில் இருப்பதுதான் சுகம் என்றது அந்த நாய்.

புதன்
கணக்கு & கையெழுத்து

கலையும் கணக்கும்

ஜீவா தன் தாத்தா உடன் தான் இருப்பான் .அவரோ வரைகலை வித்தகர் .ஜீவாவின் அறிவாற்றலை தாத்தா அவ்வப்போது சோதிப்பதும் உண்டு .
ஒரு நாள் ஒரு காகிதத்தில்
10+4 = 15
என எழுதி அதற்கு தகுந்த தராசு படத்தை வரையச் சொன்னார்..
 அவனும் வரைந்து கொடுக்க , தாத்தா ஜீவாவின் அறிவாற்றலைக் கண்டு வியந்து ,பாராட்டினார்.

கேள்வி : ஜீவா வரைந்த தராசின் தட்டு எந்தப் பக்கம் கீழ்நோக்கி இருக்கும் .??

விடை :  வலது பக்கம் (15)

கையெழுத்துப் பயிற்சி -  31


 

இன்றைய செய்திகள்

11.03.20

🌸 சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வழிதடத்தில் விரைவில் துவங்க உள்ள மெட்ரோ ரயில் சேவையில் புதிய மெட்ரோ ரெயில்கள் பயன்பட உள்ளது.

🌸 ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!
சி-17 குளோப்மாஸ்டர் விமானம் காலை 9.30 மணியளவில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

🌸 கரோனா வைரஸ் எதிரொலி திருவிழாக்களை நடத்த வேண்டாம்: கேரள கோவில்களுக்கு தேவஸ்வம் போர்டு வேண்டுகோள்

🌸கொரோனா பாதிப்பு எதிரொலி: 35 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் ஜோதி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு தடை.

🌸 ஆறு முறை உலக சாம்பியனான குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் (51கிலோ) ஆசிய தகுதிச் சுற்று சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

Today's Headlines

🌸New Metro trains are to be used in the Metro Rail service which will soon commence from vanarapet to Vimeo Nagar route in Chennai.

  🌸58 Indians stranded in Iran returned home. The C-17 Globemaster aircraft arrived at Hindon Air Force Base in Ghaziabad, Uttar Pradesh at around 9.30 am.

 🌸 Due to the adverse effecr of coronavirus ,Devaswom Board has requested Kerala temples not to celebrate any festivals.

 🌸Corona impact: For the first time in its 35-year history, spectators are banned in the Olympic torch ceremony.

 🌸 Six-time world champion, boxer ,Mary Kom (51kg) has qualified for the Tokyo Olympic Games by advancing to the semifinals in the Asian Qualifier Championship semifinals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.