பள்ளிகளுக்கு CBSE சுற்றறிக்கை!!
மாணவர்களின், கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளுக்கும், ஆசிரியர்களின் பணி அனுபவத்துக்கும், எந்த சான்றிதழ்களும் வழங்கப்படாது என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளில் சேர்வதற்கும், வங்கி கடன் மற்றும் அரசு தொடர்பான காரியங்களுக்கும், அனுபவ சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களும், அரசின் கல்வி உதவித்தொகை, நுழைவு தேர்வு விண்ணப்பம் மற்றும் பிற துறைகளின் தேவைக்காக, உத்தரவாத சான்றிதழ் கேட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு துறைகளின் சலுகைகள் மற்றும் பல்வேறு வகை தேவைகளுக்காக, பள்ளிகள் வழியாக, சி.பி.எஸ்.இ.,யிடம் சான்றிதழ் கேட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ., தரப்பில், அதுபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்படாது. அவற்றை, சி.பி.எஸ்.இ., விதிகளை பின்பற்றி, பள்ளிகளே வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment