"சாமை அரிசியின் பயன்கள்"
மருந்து செலவுக்காகவே சம்பாதியத்தில் ஒரு கனிசமான பகுதியை ஒதுக்கிடும் மக்களின் மத்தியில்,மருத்துவ செலவை குறைக்கலாம் என்றால் கசக்கவ போகிறது."நோய் நாடி நோய் முதல் நாடி" என்கிறது வள்ளுவம். வள்ளுவம் மட்டும்மில்லிங்க அனைத்து பாரம்பரிய வைத்திய முறைகளும் நோயினை வேரோடு பிடுங்கவே முயற்சிக்கின்றன.
நோய்
என்பது என்ன? நம் உடல் பல நூறு கோடி செல்களால் ஆனது, பல உறுப்புகளைக் கெ¡ண்டது. உள்ளுறுப்புகளில் சிறு தோய்வு ஏற்பட்டால் அதை, நமக்கு உணர்த்தும் விதம் உபாதைகள் வருகிறது. அதற்க்கு பெயர்தான் நோய், அப்போ! உள்ளுறுப்புத் திறன்பட வேலை செய்ய வேண்டும், அதற்கு நூண்ணுட்டங்கள் அவசியம்.இதை எங்கிருந்து பெறுவது!
இதற்க்காக எங்கேயும் தேடித் திரிய வேண்டியதில்லை,நம் சமையலறையே போதும், ஆனால் எவ்வகை உணவு என்பதில் சிறிய கவனம் தேவை. அந்த வரிசையில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை.
சர்க்கரை நோயளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.
பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். சாமை சோறு, சாமை பொங்கல், சாமை இட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப்பம், சாமை புட்டு இவ்வாறு சாமை அரிசியில் செய்த பதார்த்தங்களை பசித்த பின்னர் உட்கொள்ளும் போது நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பெ¡ருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கெ¡ள்ளும் போது உடல் உரிதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சையம்.
பாசன
நிலங்கள் வறண்டு கிடக்கும் இந்த காலகட்டத்தில் இம்மாதிரியான புஞ்சை தவசங்கள் நமக்கெள்ளாம் ஒரு அட்சைய பாத்திரம். இது மழையை நம்பி மட்டுமே பயிராகிறது. நீரின் தேவையும் குறைவு, நிலத்தடி நீரை உறிஞ்சி அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டிய அவசயமும் இல்லை. சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற பயிற்வகை-சிறு தானியம்.
இதோ
ஒரு சுவையான உணவு...
சாமை
கல்கண்டு பாத்!
தேவையானவை:-
சாமை
அரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு : அரை கப்
நெய்
: இரண்டு ஸ்பூன்
கல்கண்டு : முக்கால் கப்
திராட்சை, முந்திரி : ஒரு பெரிய ஸ்பூன்
தண்ணீர் : 4 கப்
எப்படி செய்வது:
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்
சாமையும் பருப்பும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும்
கல்கண்டை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்
வாணலில் நெய் காயவைத்து திராட்சை முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்
சாமை
சாதத்துடன் கல்கண்டு பொடியும் போட்டு நன்கு கிளறவும், முந்திரி திராட்சை சேர்க்கவும். தேவைப்படின் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்
குறிப்பு:
தண்ணீருக்கு பதில் தண்ணீரும் பாலுமாக சேர்த்து வேக விட்டால் இன்னும் சுவை கூடும்
No comments
Post a Comment