வீட்டிற்குள்ளே உள்ளதால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து மீளுவது எப்படி???
செய்திகளை பார்த்தாலே போதும். நம் BP எகிறி விடும் போல. ஒவ்வொன்றம் ஒவ்வொரு பூகம்பத்தை கிளப்புகிறது. இது போக வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய அவசியம். இவை அனைத்தும் சேர்த்து நம்மை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகி பதட்டம் அடைய செய்கிறது. சமூகத்திடம் இருந்து நாம் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்.
மேலும் ஒரு சிலர் தங்களை தாமே தனிமைப்படுத்திக் கொண்டும் உள்ளனர்.
இது
இன்னும் எத்தனை நாட்களில் சரியாகும் என்ற விடை தெரியாததால் பலரின் மன அழுத்தம் பெருகிக்கொண்டே போகிறது. மனதளவில் ஏற்கனவே பாதிப்பு உடையவர்கள் இது போன்ற சூழலில் இருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்படுவார்கள். தனிமை என்பது கொடுமையிலும் கொடுமையான ஒன்று அல்லவா. ஃபோர்டிஸ் ஹெல்த்கேரை சேர்ந்த மனநிலை மருத்துவர் டாக்டர். சமீர் பரீக் இது குறித்து நமக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்குகிறார். அவரது பரிந்துரைகள் நிச்சயம் ஓரளவிற்காவது உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.
●இடைவேளை:
எந்நேரமும் செய்தியை பார்த்து கொண்டே இருக்காதீர்கள். அது கண்டிப்பாக உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். தொலைக்காட்சியை அணைத்து விட்டு, போனை கீழே வைத்து சமூக வலைத்தளங்கள் பக்கம் செல்லாமல் கொஞ்ச நேரமாவது ரிலாக்ஸாக இருங்கள். இது கொரோனா அச்சத்தில் இருந்து உங்களை சிறிது நேரமாவது தள்ளி வைக்கும்.
●உங்களை நீங்களே தட்டி கொடுங்கள்:
உங்களை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டிய தகுந்த நேரம் இது தான். உடற்பயிற்சி, தியானம் செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பேஷியல் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள். நன்றாக தூங்குங்கள். இவை அனைத்தும் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
●பிடித்ததை செய்யுங்கள்:
எதை
செய்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமோ அதனை செய்யுங்கள். படம் வரைவது, சமைப்பது, தையல், தோட்ட பராமரிப்பு என்று உங்களுக்கு பிடித்த விஷயங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
●மற்றவர்களிடம் பேசலாமே:
மற்றவர்களை நேரில் சென்று தான் பார்க்க முடியாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ கால் மூலம் போனில் உரையாடுங்கள். உங்கள் பழைய நண்பர்கள், உறவினர்கள் என்று யாரையும் விட்டு வைக்காதீர்கள். இது தான் சரியான நேரம். அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்களின் நேர்மறை எண்ணங்கள் வளரும்.
No comments
Post a Comment